டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு… 7 பேரின் காவல் ஜனவரி 8 வரை நீட்டிப்பு!

 
டெல்லி
 

டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10-ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லி குண்டு

முதலில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் இதுவரை 3 டாக்டர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலை தலைமை தாங்கி நடத்திய டாக்டர் உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு நிதியுதவி செய்ததாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி குண்டு வெடிப்பு

இந்த நிலையில் டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவலை ஜனவரி 8-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. டாக்டர் அடீல் அகமது, டாக்டர் ஷாஹீன் சயீதா, டாக்டர் முசாமில், அமீர் ரஷீத் அலி, ஜசீர் பிலால் வானி என்ற டேனிஷ், சோயப், முப்தி இர்பான் ஆகியோரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!