செம்மண் குவாரி வழக்கு... பொன்முடி மீதான விசாரணை ஜனவரி 19-க்கு தள்ளிவைப்பு!

 
பொன்முடி

வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் அனுமதியை மீறிச் செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது.

கடந்த 2012-ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் லோகநாதன் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டார். அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 2,64,644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

பொன்முடி

இந்த வழக்கில் சதானந்தம், கோதகுமார், கோபிநாதன் ஆகிய 3 பேர் மட்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். பொன்முடி மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று தாசில்தார் நிலையில் உள்ள வசந்தகிருஷ்ணன் (விழுப்புரம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்) ஆஜரானார்.

பொன்முடி

பொன்முடி தரப்பு வக்கீல்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அரசு தரப்பு வக்கீல் கார்த்திகேயன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார். அரசு தரப்பில் ஆஜரான 57 சாட்சிகளில் 30 பேர் ஏற்கனவே பிறழ் சாட்சியம் அளித்துள்ள நிலையில், தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற சாட்சிகளை விசாரிப்பதற்காக, நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!