இன்று முதல் பால் கொள்முதல் குறைப்பு... 3000 சங்கங்கள் பங்கேற்பு.. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

 
ஆவின் பால்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மொத்த 3000 சங்கத்தினர் பால் கொள்முதலை படிப்படியாக குறைக்க துவங்கினார்கள். இதனால், இனி வரும் நாட்களில் ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசருடன், பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தை சுமூகமான தீர்வை எட்டாமல் தோல்வியில் முடிந்ததால், பால் கொள்முதலைப்  படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் கொள்முதலைக் குறைக்க துவங்கி உள்ளனர். 

ஆவின்

தினந்தோறும் கிராமப்புறங்களில் இருந்து 27.50 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கி வருவதாகவும், அதில் 25 லட்சம் லிட்டர் பால் ஆவின் நுகர்வோருக்கு வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள பால் ஆவின் இனிப்பு உள்ளிட்ட பொருட்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார் .

இந்நிலையில், கொள்முதல் விலையை உயர்த்தி தராததால் தினந்தோறும் 50,000 முதல் ஒரு லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் படிப்படியாக குறைக்கப்படும் என அறிவித்திருந்தார்.  இதனால் அடுத்த ஐந்து நாட்களில் 10 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் தமிழ்நாடு அரசுக்கு குறையும். இந்நிலையில், தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

ஒரு லிட்டருக்கு அரசு 35 ரூபாய்க்கு கொள் முதல் செய்கிறது. அதே சமயம் தனியார் நிறுவனங்கள் 47 ரூபாய் வரையில் கொள்முதல் செய்கின்றன. இதனால் கூடுதல் விலை கொடுத்து வாங்க தயாராக உள்ள தனியார் நிறுவனத்திற்கு பாலை வழங்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு!

நேற்று நடைபெறும் பால் நிறுத்தப் போராட்டத்தில் 3000 சங்கங்கள் மூலம் 25 சதவீதம் பேர் கருப்புக் கொடியுடன் பங்கேற்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்று  கொள்முதல் விலையை அதிகரித்தால், ஆவின் பாலின் விலை உயர்த்தப்படும். தனியார் பால் நிறுவனங்கள் அடுத்தடுத்து விலையை உயர்த்தியும் ஆவின் நிறுவனம் அதே விலையில் தருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web