27 வயசு தான்... ரீல்ஸ் எடுக்கும் போது கயிறு இறுக்கி இளம்பெண் உயிரிழப்பு!
உத்தரபிரதேசம், பண்டா மாவட்டம்: சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பகிரும் ஆர்வம் இன்று அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி விட்டது. ஆனால் இந்த ஆர்வம் சில சமயங்களில் மிகவும் ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கிறது.

27 வயதான மோகினி, தனது அறையில் நாற்காலியில் நின்று கழுத்தில் கயிறு கட்டிக்கொண்டு ரீல்ஸ் எடுக்கும் முயற்சியில் இருந்தார். எதிா்பாராத நிலையில் கால் தடுமாறி, கழுத்தில் கட்டிய கயிறு இறுக்கப்பட்டதால் மோகினி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நேரடியாக அவரது குடும்பத்திற்குத் தெரியவில்லை.
சம்பவம் சில மணி நேரத்துக்கு பின் அவரின் 4 வயது மகள் அறைக்கு நுழைந்த போது தாயை தொங்கிய நிலையில் கண்டுபிடித்து சத்தம் போட்டுவிட்டார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மோகினியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆரம்ப விசாரணையில், ரீல்ஸ் எடுக்க முயற்சித்தபோது தான் இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சமூக வலைத்தள ஆர்வத்தால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் நினைவூட்டுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
