கிரீஸ் கடலில் அகதிகள் படகு விபத்து… பலர் உயிரிழப்பு!
துருக்கியிலிருந்து கிரீஸ் நோக்கி வந்த அகதிகள் படகு ஒன்றை கடற்படை வீரர்கள் திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அந்த படகு தொடர்ந்து முன்னேறி வந்து கடற்படை கப்பலுடன் மோதியது. இதில் படகு கவிழ்ந்து கடலில் அகதிகள் பலர் தத்தளித்தனர். உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கடலில் சிக்கியிருந்த 25 அகதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் காயமடைந்த ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த பலர் ஐரோப்பாவில் தஞ்சம் பெற கிரீஸ் கடல் வழியை பயன்படுத்தி வருகின்றனர். இதை கட்டுப்படுத்த கிரீஸ் அரசு கடந்த சில ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மனித உரிமை குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், விபத்து தற்செயலாக நடந்தது என கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
