வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறிய மாணவர்கள்.. இதுவரை ரூ.30 கோடி வசூல்!

 
யு.ஜி.சி.

மாணவர்களுக்கு ஒரு பல்கலைக்கழகத்தில் கிடைத்த 'சீட்' ரத்து செய்த அல்லது வேறு பல்கலைக்கழகத்துக்கு மாற்றலாகி சென்றால் அவர்கள் செலுத்திய தொகையை திருப்பி அளிக்க வேண்டும். அந்த வகையில் 30 கோடி ரூபாயை யு.ஜி.சி. எனப்படும் பல்கலை மானியக் குழு வசூலித்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.

யு.ஜி.சி. தலைவர் எம். ஜகதீஷ் குமார் இதனையொட்டி நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, சில காரணங்களால் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும், அதில் சேராமல் ரத்து செய்த அல்லது வேறு பல்கலைக்கு மாற்றல் வாங்கிச் சென்ற மாணவர்களுக்கு முந்தைய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகள் வசூலித்த முழு கட்டணத்தை திரும்பத் தர வேண்டும்.

யு.ஜி.சி.

நடப்பு கல்வியாண்டில், அதாவது 2022 அக்டோர் 31 வரை வாங்கிய முழுத் தொகையையும் மாணவர்களுக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது. ஆனால் சில கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இந்தத் தொகையை திருப்பித் தராமல் இருந்தன. இது தொடர்பாக மாணவர்களிடம் இருந்து தொடர்ந்து அதிக புகார்கள் குவிந்தது. சிலர் நீதிமன்றங்களையும் நாடியுள்ளனர்.

இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிடம் இருந்து அந்தத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில், யு.ஜி.சி., ஈடுபட்டுள்ளது. புதுடெல்லி பல்கலைக்கழக இந்த வகையில் மற்ற பல்கலைகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. அந்தப் பல்கலைக்கழகம், 13,611 மாணவர்களுக்கு, ரூ.16.95 கோடி கட்டணத்தை திருப்பி தந்துள்ளது.

யு.ஜி.சி.

இதைத் தவிர, மற்ற பல்கலைக்கழகங்களிடம் இருந்து, 12.14 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு, 832 மாணவர்களுக்கு திருப்பி தரப்பட்டுள்ளது, என அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web