நீட் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுப்பு... !

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 13 மாணவர்கள், இந்த இடையூறுகள் தங்கள் செயல்திறனைப் பாதித்ததாகவும், நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அந்த மனுக்களில் மே 4 ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மே 16ம் தேதி அன்று தேசிய தேர்வு முகமை தேர்வு முடிவுகளை வெளியிட தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ” விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நீதிபதி சி.குமரப்பன் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எம் ஜோதிராமன் அமர்வு முன்பு மாணவர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர். இதில், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்ததுடன் அதே வேளையில் தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
