காதலர்கள் அதிர்ச்சி.... இனி பெற்றோர் சம்மதம் இல்லாமல் பதிவு திருமணம் செய்ய முடியாது!

 
திருமணம்

குஜராத் மாநில சட்டசபையில் திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிப்படி, பெற்றோரின் சம்மதம் இல்லாமல் பதிவு திருமணம் செய்ய முடியாது என மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவை பா.ஜ.க. அரசு சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

5வது திருமணம்

மேலும், தம்பதிகள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் சேர்க்கப்பட்டுள்ளது. மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் இணையதளம் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், காதல் திருமணங்களை தடுக்கவே இந்த சட்ட மாற்றம் கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!