பதிவுத் துறையில் தொடரும் சர்வர் பிரச்சினை... தவிக்கும் பொதுமக்கள்!

 
பதிவுத்துறை பதிவுத்துறை

தமிழகத்தில் சொத்து விற்பனை மற்றும் பத்திரப் பதிவு நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்கி எளிமைப்படுத்தும் நோக்கில், கடந்த ஜனவரி 22-ஆம் தேதி 'ஸ்டார் 3.0'   என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே 18 வகையான புதிய சேவைகளைப் பெறலாம் எனப் பதிவுத்துறை சார்பில் ஆசை காட்டப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் தொடங்கி 2  மாதங்கள் கடந்த நிலையிலும், இன்று வரை ஒரு சேவையைக் கூட முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சொத்து பத்திரம்

குறிப்பாக, ஒரு சொத்தின் வில்லங்க விபரங்களைப்  பார்க்க இணையதளத்திற்குச் சென்றால், முதல் கட்டத் தகவல்களைப் பதிவிட்ட உடனேயே அடுத்த பக்கத்திற்குச் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஒவ்வொரு முறையும் திரையில் 'மன்னிக்கவும், இந்த அமர்வு காலாவதியாகிவிட்டது'  என்ற வாசகமே பளிச்சிடுகிறது. வில்லங்கம் பார்ப்பது மட்டுமன்றி, அறிவிக்கப்பட்ட 18 புதிய வசதிகளில் எந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தாலும், பதிவுத்துறை இணையதளம் பொதுமக்களிடம் 'மன்னிக்கவும்' என்ற வார்த்தையைச் சொல்லியே கைகளைக் கழுவி விடுகிறது. இதனால் பத்திரப் பதிவு மற்றும் சொத்து விற்பனை தொடர்பான பணிகள் தமிழகம் முழுவதும் முடங்கிக் கிடக்கின்றன.

பத்திரபதிவு பட்டா பத்திரம் ஸ்டாம்பேப்பர்

புதிய மென்பொருளில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யாமல் அவசர கதியில் அறிமுகப்படுத்தியதே இந்தத் சொதப்பலுக்குக் காரணம் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர். "ஆன்லைன் வசதி வந்துவிட்டதாக அரசு கூறுகிறது, ஆனால் நடைமுறையில் பழைய முறையை விடவும் இது மிக மோசமாக உள்ளது" எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மார்ச் மாத இறுதியில் சொத்து விற்பனை மற்றும் பத்திரப் பதிவுகள் உச்சத்தில் இருக்கும் வேளையில், இந்த மென்பொருள் குளறுபடியால் அரசுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யப் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!