தாயுடன் தகாத உறவு... ஆட்டோ ஓட்டுநரை கோடாரியால் வெட்டிய சிறுவன்... மகன் நிலையைக் கண்டு தாயும் உயிரிழப்பு!

 
போலீசார் கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சியில், தவறான உறவு விவகாரத்தில் ஏற்பட்ட மோதல், ஒரு உயிரைப் பறித்ததோடு மற்றொவரை மரணப் போராட்டத்திற்குத் தள்ளியுள்ளது.

பேளுக்குறிச்சியைச் சேர்ந்த கதிரவன் (42) என்பவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் தனது நண்பர்களுடன் பொது இடத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தான் மறைத்து வைத்திருந்த கோடாரியால் கதிரவனின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளான்.

நரபலி க்ரைம் கொலை

ரத்த வெள்ளத்தில் உயிருக்குத் துடித்துக்கொண்டிருந்த கதிரவனைக் கண்ட அவரது தாய் ஜானகி, அந்த அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனின் தாயுடன் கதிரவனுக்குத் தவறான உறவு இருந்ததாகவும், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால் ஆத்திரத்தில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.

படுகாயமடைந்த கதிரவன் தற்போது நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவனைப் போலீசார் கைது செய்து, சேலத்தில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!