ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!!

 
ஆன்லைன் ரம்மி

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களில் பெரும் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்வது வாடிக்கையாகி வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக  அரசு ஆன்லைன்  தடை சட்டத்தை கொண்டுவந்தது. அதற்கு கடந்த ஆண்டு  ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தற்போது மீண்டும் இந்த தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  ஆன்லைன்  மசோதாவை சட்டமாக்கி உடனடியாக அதற்கான விதிமுறைகளையும் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.  இந்நிலையில்  ஏப்ரல் 21ம் தேதி தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஆன்லைன் மோசடி

அதன்படி தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் மற்றும் ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகள்2023ன் கீழ் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஏப்ரல் 21ம் தேதியில் இருந்து இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம் 2022க்கான சட்ட விதியாக இது ஏற்கப்பட வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளை அளிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் வெளியூர் நிறுவனங்கள் தங்களின் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு மாதத்தில் ஆணையத்தில் இந்த நிறுவனங்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும். சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தின் செயலாளரிடம் ஒரு லட்சம் கொடுத்து, பெயர் பதிவு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை பெறலாம்.

ஆன்லைன்

இந்த விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு, அந்த நிறுவனத்தின் பெயரை பதிவு செய்வதையோ அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கும் நடவடிக்கையையோ அதை கொடுத்த 15 நாட்களுக்குள் செயலாளர் மேற்கொள்வார். அவரின் முடிவே இறுதியானது. இதனை நிராகரிப்பதற்கு முன்பு, விண்ணப்பதாரருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தவறான தகவல்களை கொடுத்து சான்றிதழ் பெறப்பட்டால் அதற்கான விளக்க நோட்டீசை ஆணையம் அளிக்க வேண்டும். அந்த நோட்டீசுக்கு 15 நாட்களுக்குள் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுக்கான  ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அரசே நியமிக்கும். இவர்கள் 5 ஆண்டுகள் தொடங்கி அவர்களின் 70 வது வயது வரை இந்த பதவியில் நீடிக்கலாம்.  அவர்களுக்கு மறுபணி நியமனம் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web