"வெனிசுலா அதிபரை உடனே விடுவிங்க!" - அமெரிக்காவிற்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!

 
சீனா

தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய அதிரடி ராணுவத் தாக்குதல் மற்றும் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவின் கைது விவகாரம், உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் செயலை 'சர்வதேச விதிமீறல்' என சீனா சாடியுள்ளது.

நேற்று அதிகாலை அமெரிக்கப் படைகள் வெனிசுலா தலைநகர் கராகஸில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் ராணுவத் தளங்கள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலின் போது, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரிஸ் ஆகிய இருவரையும் அமெரிக்கச் சிறப்புப் படையினர் சிறைபிடித்தனர்.

அவர்கள் இருவரும் அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தும் கும்பல்களுக்கு உடந்தையாக இருந்ததாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது இருவரும் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கைக்குச் சீனா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

வெனிசுவேலா டெல்சி ரோட்ரிகஸ்

சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அதிபரை அத்துமீறி கைது செய்து நாடு கடத்திய அமெரிக்காவின் செயல் சர்வதேச சட்டங்களுக்கும், ஐ.நா.வின் கொள்கைகளுக்கும் எதிரானது. இது ஒரு மேலாதிக்கப் போக்கு. மதுரோ மற்றும் அவரது மனைவியை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ட்ரம்ப் வெனிசுலா

அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் அமெரிக்கா முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பிரச்சனைகளை ராணுவ வலிமையால் தீர்க்க முயலாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவே அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியதாக வெனிசுலா அரசு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையில், "வெனிசுலாவில் ஜனநாயகம் திரும்பும் வரை அமெரிக்காவே அந்நாட்டை தற்காலிகமாக நிர்வகிக்கும்" என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

ரஷ்யா மற்றும் கியூபா போன்ற நாடுகளும் அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதால், லத்தீன் அமெரிக்கப் பகுதியில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!