‘உதயம்’ பிராண்டை கையகப்படுத்திய ரிலையன்ஸ்… பருப்பு மார்க்கெட்டில் பெரிய திருப்பம்!

 
உதயம்
 

உதயம் பருப்பு ரகங்களை விற்பனை செய்யும் ‘உதயம்ஸ் அக்ரோ புட்ஸ்’ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புரொடக்ட்ஸ் கையகப்படுத்தியுள்ளது. இதனால் உதயம் பிராண்டு இனி ரிலையன்ஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த ஒப்பந்தம் உணவுப் பொருள் சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன்படி, உதயம்ஸ் அக்ரோ புட்ஸ் நிறுவனர்களிடம் குறைந்த அளவு பங்குகளே தொடரும். உதயம் தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனை, ரிலையன்ஸின் விநியோக வலையமைப்பின் மூலம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இதனால் பிராண்டின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ்

தற்போது ‘உதயம்’ பெயரில் பருப்பு வகைகள் மட்டுமல்லாமல், தானியங்கள், சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், இட்லி மாவு உள்ளிட்ட பல பொருட்கள் சந்தையில் உள்ளன. ரிலையன்ஸ் இணைப்பு மூலம் இந்த தயாரிப்புகள் இன்னும் அதிகமான வீடுகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!