மத போதகர் ஜான் ஜெபராஜ் போக்சோவில் அதிரடி கைது… ஏப்ரல் 25 வரை நீதிமன்ற காவல்!

 
மத போதகர் ஜான் ஜெபராஜ்

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜான் ஜெபராஜ் . 37 வயதான இவர் கிறிஸ்தவ மத போதகராக இருக்கும் நிலையில் இவர் மீது பாலியல் புகார் வந்தது. அதன்படி 2024 மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு 17 மற்றும் 14 வயதுடைய சிறுமிகள் கலந்து கொண்ட நிலையில் அந்த சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தது.

மத போதகர் ஜான் ஜெபராஜ்

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. தீவிர தேடுதல் வேட்டையில் அவர் பெங்களூருவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

மத போதகர் ஜான் ஜெபராஜ்

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்தனர். தனிப்படைகள் அமைத்து போலீசார் அவரை தேடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் தற்போது அவருக்கு ஏப்ரல் 25ம் தேதி வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?