கலைவாணர் சிலை புதுப்பிப்பு… இன்று முதல்வர் ஸ்டாலின் திறப்பு!

 
கலைவாணர் கலைவாணர்
 

கலைவாணர் அரங்க வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1908ஆம் ஆண்டு பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன் 1940, 1950களில் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர், பாடகர், நாடக மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக புகழ் பெற்றவர்.

ஸ்டாலின்

ஜி.என்.செட்டி சாலை மற்றும் திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் அண்ணா திறந்த கலைவாணர் சிலை, 1999ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்ட போது சாலை ஓரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலையை கலைவாணர் அரங்க வளாகத்துக்குள் மாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

திமுக பொதுக்குழு செயற்குழு அறிவாலயம் கூட்டம் ஸ்டாலின்

இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் உத்தரவிட்டதையடுத்து ரூ.50 லட்சம் செலவில் சிலை புதுப்பிக்கப்பட்டது. கலைவாணர் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்ட இந்த புதிய சிலையை இன்று காலை 10 மணிக்கு முதல்வர் திறந்து வைக்கிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!