பிரபல தயாரிப்பாளர் ரோஜர் அல்லர்ஸ் காலமானார்!

 
ரோஜர்

ஹாலிவுட்டின் புகழ்பெற்ற அனிமேஷன் இயக்குநர்களில் ஒருவரான ரோஜர் அல்லர்ஸ், 76 வயதில் காலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவரது மறைவை டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். “ரோஜர் அல்லர்ஸ் டிஸ்னியின் எதிர்கால தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்கும் படைப்புகளை வழங்கியவர்” என அவர் புகழாரம் சூட்டினார்.

அனிமேஷன் உலகில் மறக்க முடியாத படமான ‘தி லயன் கிங்’ மூலம் உலகளவில் பிரபலமானவர் ரோஜர் அல்லர்ஸ். இதுதவிர ‘அலாடின்’, ‘தி லிட்டில் மெர்மெய்ட்’, ‘தி பியூட்டி அண்ட் த பீஸ்ட்’, ‘ட்ரான்’, ‘ஓபன் சீசன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் அவர் முக்கிய பங்காற்றினார். அவரது படைப்புகள் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்தன.

1949 ஜூன் 29-ஆம் தேதி நியூயார்க்கில் பிறந்த ரோஜர் அல்லர்ஸ், சிறுவயதிலிருந்தே கலை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் நுண்கலைப் பட்டம் பெற்ற அவர், அனிமேஷன் துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்களும், சக கலைஞர்களும் சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!