உடல் நலக்குறைவால் பிரபல எழுத்தாளர் ராண்டார் கை காலமானார்!

 
ராண்டார் கை

சினிமா, இசை, குற்றங்கள், அரசியல் கட்டுரைகள் என ஒரு தலைமுறை இளைஞர்களை தன் எழுத்தால் வசியப்படுத்தி, நெறிப்படுத்திய எழுத்தாளர் ராண்டார் கை உடல்நிலைக் குறைவால் காலமானார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ராண்டார் கை, தனது வாழ்க்கையை வழக்கறிஞராகத் துவங்கினார். 1976ல் முழுமையாக எழுத்துப் பணியில் ஈடுபடுவதற்காக வேலையிலிருந்து விலகிய ராண்டார் கை, 50க்கும் மேற்பட்ட  புத்தகங்களை எழுதியுள்ளார்.

தமிழ் திரையுலகின் மூத்த திரைப்பட வரலாற்று ஆசிரியர், கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் மதபூஷி ரங்கதுரை. இவருடைய புனைப்பெயரான  ராண்டார் கை என்பதன் மூலமாகவே வாசகர்களால் அறியப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.

ராண்டார் கை

தொழில்முறை வழக்கறிஞராக இருந்த  ராண்டருக்கு திரைப்படங்கள் மீது தனிப்பட்ட ஆர்வம். இதன் காரணத்தால்  சட்டத் தொழிலில் இருந்து நகர்ந்து  ”தி இந்து நாளிதழ்”  ”ப்ளாஸ்ட் ஃப்ரம் தி பாஸ்ட்” வாராந்திர  பத்திரிகையில் எழுதினார். விளம்பரப் படங்களைத் தயாரிப்பதைத் தவிர, சில குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

rip

ராண்டார் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். 'மெமரிஸ் ஆஃப் மெட்ராஸ்' அவரது கடைசி புத்தகம்.  ராண்டோர், தமிழ் திரைப்படமான தவபுதல்வன் திரைப்படத்தில் 'லவ் இஸ் ஃபைன் டார்லிங்' ஒலிப்பதிவுக்கான பாடல் வரிகளையும் எழுதியவர். அவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் மற்றும் பல ஆவணப்படங்களை உருவாக்கினார்; அவர் மனைவி மற்றும் மகள் உள்ளனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web