ரேணுகாசாமி கொலை வழக்கு: நடிகை பவித்ராவுக்கு 'வீட்டு சாப்பாடு' வழங்க நீதிமன்றம் அனுமதி!

 
பவித்ரா

சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நடிகை பவித்ரா கவுடா கைதி எண். 6024... பரப்பன அக்ரஹாரா சிறையில் முதல் நாள் எப்படி இருந்தது?!

சிறை உணவை உட்கொள்ள சிரமப்படுவதாகக் கூறி பவித்ரா கவுடா, நாகராஜூ மற்றும் லட்சுமணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பரிசீலித்தனர். அதன்படி, தினமும் இரவு ஒரு வேளை மட்டும் வீட்டில் சமைத்த உணவை அவர்கள் சாப்பிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பவித்ரா கவுடா

இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் ரேணுகாசாமியின் தாயார் ரத்னபிரபா அளித்த வாக்குமூலம் முரணாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து வரும் ஜனவரி 5-ம் தேதி நீதிபதிகள் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

இந்த வழக்கில் நடிகர் தர்ஷன் ஏற்கனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!