செய்தி சேகரிக்க சென்ற நிருபர் கடத்தப்பட்டு கொலைவெறித் தாக்குதல்!
கரூர் கிருஷ்ணராயபுரம் பகுதியில் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு குவாரிக்கு ரூ.23.55 கோடி அபராதம் விதித்தபோதும் கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக செய்தி சேகரிக்க திருச்சி செய்தியாளர் கதிரவன் சென்றார்.

அப்போது கனிமவள கொள்ளை கும்பல் நிருபரை சுற்றிவளைத்து தாக்கியது. கேமரா, மைக் உள்ளிட்ட உபகரணங்களை பிடுங்கிய அவர்கள் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். குவாரி பகுதியில் இருந்து நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக எம்எல்ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் கொண்ட கும்பல், நிருபர், ஒளிப்பதிவாளர், வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த எஸ்.பி. ஜோஸ் தங்கையா உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் படை விரைந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படுகாயங்களுடன் 4 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
