குடியரசு தினவிழாவில் பரபரப்பு... மேடையிலேயே சரிந்து விழுந்த அமைச்சர்!
கேரளாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அந்நாட்டின் அமைச்சர் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று இந்தியா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற விழாவில், மாநிலத் தொல்லியல் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி கலந்து கொண்டார். விழாவின் போது அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கண்ணூரில் நடந்த விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி, அதன் பிறகு மேடையில் குடியரசு தின உரையை வாசிக்கத் தொடங்கினார். அவர் பேசிக்கொண்டிருந்த போதே திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு நிலைகுலைந்தார். அமைச்சர் சுருண்டு விழுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர், உடனடியாக ஓடிச் சென்று அவரைத் தாங்கிப் பிடித்தனர்.
மயக்கமடைந்த அமைச்சருக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்குச் சுயநினைவு திரும்பாததால், பாதுகாப்புடன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தத் திடீர் சம்பவத்தால் விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் பெரும் பதற்றமும், கவலையும் நிலவியது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, ரத்த அழுத்த மாறுபாடு அல்லது வெயில் காரணமாக அவர் மயக்கமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.குடியரசு தினக் கொண்டாட்டங்களின் போது மூத்த அமைச்சர் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்த இந்தச் சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
