மெரினாவில் குடியரசு தின முதல் நாள் ஒத்திகை!

 
குடியரசு தினம்

 

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 26ம் தேதி திங்கள்கிழமை நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், உழைப்பாளர் சிலை அருகே விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

குடியரசு தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றுகிறார். இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும், தமிழ்நாடு அரசு துறைகளின் வாகன அணிவகுப்பும் நடைபெற உள்ளது.

இதற்கான பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 7 மணிக்கு நடந்தது. ராணுவம், கடற்படை, வான்படை வீரர்கள், தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆர்.பி.எப், காவல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதனால் மெரினா காமராஜர் சாலை முதல் போர் நினைவு சின்னம் வரை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!