77வது குடியரசு தினம்... டெல்லி முழுவதும் போஸ்டர்களில் அல்கொய்தா பயங்கரவாதி புகைப்படம் எச்சரிக்கை!
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் ஜனவரி 26-ந்தேதி டெல்லி கடமை பாதையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த விழாவில் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் ஊர்சுலா வான்டர் லெயன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.
#WATCH | Delhi: Ahead of the 77th Republic Day, security agencies have intensified surveillance across the National Capital Region. Posters of wanted terrorists have been put up at railway stations, bus terminals, and markets throughout Delhi#RepublicDay2026 #NCR… pic.twitter.com/JcUO3NwHJv
— Argus News (@ArgusNews_in) January 19, 2026
இந்த நிலையில், டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை போஸ்டர்களில் முதன்முறையாக அல்-கொய்தா பயங்கரவாதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. முகமது ரேஹான் என்ற அந்த நபர் இந்திய துணைக் கண்டத்தில் செயல்படும் அல்-கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், போலீசார் மற்றும் உளவு அமைப்புகளால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பு உபகரணங்கள் விரிவாக பயன்படுத்தப்படுவதுடன், உளவு அமைப்புகளிடமிருந்து கிடைத்த அச்சுறுத்தல் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
