குடியரசு தின ஸ்பெஷல் … வானில் சாகசத்தில் அசத்திய போர் விமானங்கள்!
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லி கடமை பாதையில் நடைபெற்ற விழாவில் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் கலாசார பாரம்பரியம் பிரதிபலித்தது. இதில் பங்கேற்க 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படையின் சாகசங்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தின. ஐந்து தளங்களில் இருந்து புறப்பட்ட விமானங்கள் வானில் அணிவகுத்துச் சென்றன. 16 போர் விமானங்கள், 4 போக்குவரத்து விமானங்கள் மற்றும் 9 ஹெலிகாப்டர்கள் என மொத்தம் 29 விமானங்கள் கலந்து கொண்டன. ‘வி’ என்ற ஆங்கில எழுத்து வடிவில் ஒரே உயரத்தில் பறந்து சென்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.
வஜ்ரங் வடிவ சாகசத்தில் 6 ரபேல் போர் விமானங்கள் துல்லியமாக பறந்து வலிமையை வெளிப்படுத்தின. திரிசூல வடிவில் நடந்த சாகசத்தில் ரபேல் விமானம் மணிக்கு 900 கி.மீ. வேகத்தில், தரையிலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பறந்தது. மிக், சுகோய், ஜாகுவார் உள்ளிட்ட விமானங்களுடன் நடைபெற்ற இந்த சாகசம் இந்திய விமான படையின் திறன் மற்றும் தயார்நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
