4வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்... தெலங்கானா சுரங்க விபத்து மீட்புப் பணியில் புவியியல் நிபுணர்கள்!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 8 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீட்பு பணியில் ஈடுபட தெலங்கானா அரசு இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை நாடியுள்ளது.
தொடர்ந்து 4வது நாளாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 8 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "தற்போது, சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை, இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் வேறு சிலருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். தற்போது தண்ணீரை அகற்றிவிட்டு முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் கடைசி 40 மீ - 50 மீட்டர் வரை செல்லமுடியாத நிலையே உள்ளது.
நாங்கள் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். எல் அன்ட் டி(L&T) நிபுணர்களும் இங்கு வந்துள்ளனர்.
இவர்களைத் தவிர சுரங்கப்பணிகளில் அதிகம் அனுபவம் வாய்ந்த எல் அன்ட் டி நிறுவனத்துடன் தொடர்புடைய ஆஸ்திரேலிய நிபுணர் ஒருவர் சுரங்கப்பாதையின் உறுதித்தன்மையை ஆராய்ச்சி செய்வதற்காக இணைந்துள்ளார்." என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!