ரெப்போ வட்டி 0.25% குறைப்பு... கடனுக்கான வட்டி தளர்வு?

 
ரிசர்வ்
 

வலுவாக முன்னேறி வரும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் பணவீக்கம் தெளிவாக குறைந்துள்ள சூழலில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனின் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிசம்பர் 3 முதல் 5 வரை மும்பையில் நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்தின் முடிவைப் பகிர்ந்த ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, தற்போதைய பொருளாதார நிலைமைகள் ஆர்பிஐ முடிவில் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார்.

ரிசர்வ் வங்கி

இந்தக் குறைப்பின் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.50% இல் இருந்து 5.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்து, வளர்ச்சி வேகமாக முன்னேறி வரும் நிலையில், வங்கிகளுக்கான கடன் வசதிகளை மேலும் சுலபமாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி குறைவதால் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிப்பதால், கடன் எடுப்போர்கள் இதை வரவேற்று வருகின்றனர். இந்த மாற்றம் பொதுமக்களின் நிதிச் சுமையை தளர்த்தக்கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!