செல்போன் எண், வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி... ரிசர்வ் வங்கி அதிரடி பரிசீலனை!

 
வங்கி வங்கி

செல்போன் சேவையில் 'நம்பர் போர்டபிலிட்டி'  வசதி இருப்பது போல, வங்கிச் சேவையிலும் கணக்கு எண்ணை மாற்றாமல் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறும் புதிய வசதியை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

 சிறப்பம்சங்கள்:

கணக்கு எண் மாறாது: வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான அல்லது சிறந்த சேவை வழங்கும் மற்றொரு வங்கிக்கு மாறினாலும், அவர்களின் பழைய வங்கி கணக்கு எண் அப்படியே தொடரும்.தடையற்ற இடமாற்றம்: தற்போது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாறும்போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சம்பளக் கணக்கு, மியூச்சுவல் ஃபண்ட் (SIP), கடன் தவணைகள்  மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியம் போன்ற அனைத்து விவரங்களையும் புதிய வங்கியில் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய சிரமம் உள்ளது. புதிய 'பேமெண்ட்ஸ் சுவிட்சிங் சர்வீஸ்'   மூலம் இந்தச் சிக்கல்கள் களையப்படும்.

வாடிக்கையாளர் சுதந்திரம்: சிறந்த வட்டி விகிதம் அல்லது மேம்பட்ட டிஜிட்டல் சேவைகளை வழங்கும் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்தவித தடையுமின்றி மாற இத்திட்டம் வழிவகை செய்யும்.ஆரோக்கியமான போட்டி: இந்த வசதி அறிமுகமாவதன் மூலம், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள வங்கிகளுக்கு இடையே சேவைத் தரத்தை மேம்படுத்துவதில் ஆரோக்கியமான போட்டி உருவாகும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள '2028-ம் ஆண்டுக்கான பேமெண்ட் தொலைநோக்கு ஆவணத்தில்' (Payments Vision 2028) இத்திட்டம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சுதந்திரத்தையும் எளிமையான வங்கிச் சேவையையும் வழங்குவதே ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, வங்கித் துறையில் இது மிகப்பெரிய புரட்சியாகக் கருதப்படும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!