குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து...10 பேர் உயிரிழப்பு!

எகிப்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்.
எகிப்து நாட்டின் கிசா மாகாணம் கெர்டாசா நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிடத்தில் வசித்து வந்த பலர் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த கட்டிட விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்த போலீசாரின் விசாரணையில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!