நெகிழ்ச்சி!! இறந்தும் 4 பேருக்கு வாழ்வளித்த ராணுவ வீரரின் மனைவி!!

 
சத்யா

இறந்தவர்களின் உடலில் இருந்து  உடல் உறுப்புக்களை தானம் வழங்குவதில் முன்பெல்லாம் விழிப்புணர்வு குறைவாக இருந்தது. இப்போதெல்லாம் பலரும் உடல் உறுப்பு தானத்தை செய்து வருகின்றனர். இந்த விழிப்புணர்வு பலரின் வாழ்வை மீட்டுத் தருகிறது. மண்ணிற்கும், நெருப்பிற்கும் தரும் உடலை வாழ்பவர்களுக்கு கொடுத்தால் அவர்களின் ஆயுள் நீடிக்கும் என்பதையும் உணர்ந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கண்ணமங்கலத்தில் வசித்து வருபவர்  செந்தில் குமார்.

உறுப்பு தானம்

இவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 37 வயது சத்யா. இவருக்கு மூளையில் இரத்தப்போக்கு மற்றும் ரத்தம் உறைவு காரணமாக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மூளைச் சாவு அடைந்தார். இதனை அடுத்து  சத்யாவின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அதன்படி இவரது கல்லீரல்,கிட்னி, கண்கள் ஆகியவற்றை சென்னையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது.

உறுப்பு தானம்

நுரையீரல் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை குமரன் மருத்துவமனைக்கும், இரண்டு கிட்னிகள் சென்னை மியாட் மற்றும் SRMC மருத்துவமனைக்கும், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. தானமாக பெறப்பட்ட சத்தியாவின் உடல் உறுப்புகள் இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. இவரின் உடல் உறுப்பு தானத்தால் பலர் உயிர் பெற்றுள்ளனர்.  பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கும்  ராணுவ வீரரின் மனைவி சத்யாவின் உடல் பாகங்களை பெற்றவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web