நெகிழ்ச்சி!! மகனின் கல்லறையில் QR குறியீடு!!

 
ஐவின்

சோகத்தில் மிகப்பெரியது புத்திர சோகம் என்பார்கள். அந்த சோகத்திலும் மகனின் நினைவுகளை காலம் உள்ள வரை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் கேரளாவில் பெற்றோர்கள் நிர்மாணித்துள்ளனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் திருச்சூர் மாவட்டம் குறியாச்சிரா பகுதியில் வசித்துவ் வருகிறார்  பிரான்சிஸ். இவர் ஓமனில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி லீனா, ஓமனில் இந்திய பள்ளி  தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மகன் ஐவின் 26 வயதில் மருத்துவராக பணிபுரிந்த சமயத்தில் பேட்மின்டன் விளையாடும் போது துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். ஐவின் டாக்டராக மட்டுமின்றி இசை, விளையாட்டில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தவர். 

ஐவின்

இளம் வயதில் மகனை இழந்தாலும், அவனது வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்க வேண்டும் என ஐவினின் பெற்றோர்  என்ன செய்யலாம் என யோசித்தனர். அதன்படி குறியாச்சிரா செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் உள்ள ஐவின் கல்லறையில் க்யூஆர் கோடு ஒன்றை பதித்துள்ளனர். இந்த க்யூஆர் கோடை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்தால், ஐவினின் புகைப்படம், கல்லூரியில் அவரது நிகழ்ச்சிகள், நண்பர்கள் வட்டம், கீபோர்டு, கிடார் நிகழ்ச்சிகள் மற்றும் அவரைப் பற்றிய பிற விவரங்கள், ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இதற்காக தனியாக ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஐவின்
இது குறித்து ஐவினின் தந்தை பிரான்சிஸ்  ‘‘ஐவின் பல நபர்களின் தகவல்களை க்யூஆர் கோடுகளாக உருவாக்கி அனுப்பி கொண்டே இருப்பார். இதனால் தான் ஐவினை  க்யூஆர் கோடு மூலம் அவனின் நினைவுகளுக்கு உயிரூட்ட விரும்பினோம். அதற்காக ஐவினைப் பற்றிய அத்தனை தகவல்களையும் தொகுத்து வந்தோம். தற்போது இதனை க்யூஆர் கோடாக உருவாக்கி கல்லறையில் பதித்துள்ளோம். ஐவினின் வாழ்க்கை மற்ற இளைஞர்களுக்கு ஓர் உந்துதலாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இதனை செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web