நெகிழ்ச்சி... அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை கட்டியணைத்த மெஸ்ஸி!

 
நெகிழ்ச்சி... அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை கட்டியணைத்த மெஸ்ஸி! 

அர்ஜென்டீனாவில் வசித்து வருபவர் லியோனல் மெஸ்ஸி. 37 வயதான தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அணி குரூப் ஏ பிரிவில் 2வது இடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு டிரா செய்தாலே போதுமானது அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுவிடும். மெஸ்ஸி எப்போதும் ரசிகர்களை மதிப்பவராக இருக்கிறார். 

ரசிகர்கள் அவர்களது ஜெர்ஸியில் கையெழுத்துக் கேட்டால் தவறாமல் செய்து விடுவார். போர்டோ உடனான போட்டிக்கு முன்பு மெஸ்ஸி திடலை நோக்கிச் செல்லும்போது ஒரு சிறுவன் வீல் சேரில் உட்கார்ந்து ஆர்ஜென்டீனா ஜெர்ஸி அணிந்து மெஸ்ஸி மெஸ்ஸி என கத்திக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்த மெஸ்ஸி அவரிடம் வந்து கையெழுத்து போட்டுச் செல்வார். அந்தச் சிறுவன் கட்டியணைக்க கேட்டதும் மெஸ்ஸியும் அதைச் செய்வார். 

இந்நிகழ்வுகளை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சிறுவனின் தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்ட பதிவினை எழுதியுள்ளார். 5 வயதிலிருந்தே அந்தச் சிறுவன் கால்பந்து ரசிகனாக இருந்ததகாவும் மெஸ்ஸியைக் காண்பதே அவனது கனவாக இருந்ததாகவும் அந்தப் பதிவில் கூறியுள்ளார். மெஸ்ஸி செய்ததை எங்களால் வாழ்வில் மறக்க முடியாதென்றும் அந்தப் போட்டியில் மெஸ்ஸி அடித்த ஃபிரீ கிக் குறித்தும் பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது