நெகிழ்ச்சி... விமான விபத்தில் பலியான 270 பேரின் நினைவாக மரக்கன்றுகள்.!.

 
நெகிழ்ச்சி... விமான விபத்தில் பலியான 270 பேரின் நினைவாக மரக்கன்றுகள்.!. 

 

அகமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி நடந்த பயங்கர விமான விபத்தில் 270 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விமான விபத்தில் உயிர் நீத்த 270 பேரின் நினைவாக, மதுரை மண்ணில் அதே எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடப்பட்டு ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 29 பேர் என மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 5 மருத்துவ மாணவர்களும் அடங்குவர்.

விமான விபத்து

ஒரு லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டு வரும் பொறியாளர் சோழன் குபேந்திரன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு நடந்தது. 

விமான விபத்து

"உயிரிழந்தவர்களின் நினைவுகள் இந்த மரங்கள் மூலம் வாழும்; அவை மற்றவர்களுக்கு ஆக்ஸிஜனையும் வாழ்வையும் தரும்" என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த உன்னத பணியில் இணைந்து, ஒவ்வொரு மரக்கன்றையும் நட்டு தங்கள் மரியாதையை செலுத்தினர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது