நெகிழ்ச்சி வீடியோ!! நெஞ்சில் ஆட்டோகிராப் வாங்கிய கவாஸ்கர்!! நன்றி தெரிவிக்கும் தோனி!!

16வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மார்ச் 31 முதல் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் சிஎஸ்கே அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். தற்போது சென்னை அணி டெல்லிக்கு எதிராக நடைபெறும் கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். சென்னையில் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் நடப்பாண்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான தமிழக ரசிகர்கள் சென்னை அணிக்கு ஆதரவு கொடுத்தனர்.
𝙔𝙚𝙡𝙡𝙤𝙫𝙚! 💛
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
A special lap of honour filled with memorable moments ft. @msdhoni & Co. and the ever-so-energetic Chepauk crowd 🤗#TATAIPL | #CSKvKKR | @ChennaiIPL pic.twitter.com/yHntEpuHNg
குறிப்பாக எதிரணியின் மைதானங்களிலேயே தோனிக்காக ஆதரவு கொடுத்த ரசிகர்கள் சேப்பாக்கத்தில் அவர் சிக்ஸர் அடித்த போதெல்லாம் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு 100 அளவில் சத்தம் எழும்பியது. இந்நிலையில் நேற்றுடன் இந்த சீசனில் சேப்பாக்கத்தில் சென்னை பங்கேற்கும் லீக் சுற்று போட்டிகள் முடிந்தன. அந்த வகையில் தங்களுக்கு இந்த சீசன் முழுவதும் அபாரமான ஆதரவு கொடுத்த தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்காக போட்டியின் முடிவில் ஒலிபெருக்கியில் நன்றி தெரிவித்த கேப்டன் எம்எஸ் தோனி தனது கையொப்பமிட்ட பந்துகள், மஞ்சள் நிற பதாகைகள், ஜெர்ஸி, தொப்பிகள் போன்ற உபகரணங்களை பரிசாக மைதானத்தை சுற்றிச் சென்று தூக்கி போட்டார். இதனை பிடிப்பதற்கு ரசிகர்கள் ஆரவாரத்துடன் போட்டி போட்டனர்.
ஏற்கனவே முழங்கால் வலியுடன் இத்தொடரில் விளையாடி வரும் தோனி போட்டி முடிந்ததும் வலியை குறைப்பதற்காக ஐஸ் பேக் வைத்துக்கொண்டே சிரித்த முகத்துடன் அந்த பரிசுகளை வழங்கினார். இந்த போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட இந்திய நட்சத்திர ஜாம்பவான் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தோனியிடம் ரசிகனை போல ஓடி சென்று தன்னுடைய நெஞ்சின் மீது இருக்கும் சட்டையில் ஆட்டோகிராப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
அதை சற்றும் எதிர்பாராத தோனி “நீங்க போய் என்கிட்ட ஆட்டோகிராப் கேட்கலாமா” என்ற வகையில் பணிவுடன் கட்டிப் பிடித்து உடனடியாக கவாஸ்கர் கேட்ட இடத்தில் ஆட்டோகிராப் போட்டு நன்றியும் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவானாக போற்றப்படும் கவாஸ்கர் ஒரு சாதாரண ரசிகனாக மாறி தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து சிவம் துபே, மொய்ன் அலி, துஷார் தேஷ்பாண்டே, ருதுராஜ் உள்ளிட்ட சென்னை அணியினரும் தமிழில் எழுதிய பதாகைகளுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கையொப்பமிட்ட பந்துகள் ஜெர்சிகளை பரிசு அளித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!