நெகிழ்ச்சி வீடியோ... பூட்டியிருந்த கடையில் சிக்கிக் கொண்ட சிட்டுக்குருவிக்காக களம் இறங்கிய கலெக்டர், நீதிபதி...!

நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களை திரும்பி பார்க்க முடியாத அளவுக்கு மொபைல் சாதனங்களில் மூழ்கி கிடக்கிறோம். இந்நிலையில் கேரள மாநிலத்தில் நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நடந்த ஒரு அரிய மீட்பு முயற்சி சமூகத்தையே நெகிழ வைத்துள்ளது. உள்ளிக்கல் பகுதியில் அமைந்துள்ள துணிக்கடை ஒன்று திடீரென மூடப்பட்டது. அதன் கண்ணாடிப் புகுமுனையில் சிட்டுக்குருவி ஒன்று சிக்கிக் கொண்டது. இதனை மீட்பதற்காக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட்டனர்.
கடந்த 6 மாதங்களாக அந்த கடை உயர்நீதிமன்ற உத்தரவால் பூட்டப்பட்டு இருந்த நிலையில் சிட்டுக்குருவி துடிக்கும் சத்தம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது. முதலில் தீயணைப்பு மற்றும் வனத்துறை அதிகாரிகளை மக்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் சட்ட விவகாரம் காரணமாக அவர்கள் உதவ முடியாது என கையை விரித்துவிட்டனர். இதனையடுத்து கண்ணூர் மாவட்ட ஆட்சியர் அருண் கே. விஜயனிடம் சென்றது. அவர் உடனடியாக உள்ளிக்கல் ஊராட்சி செயலாளரிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இது குறித்து விவரங்களை அறிந்த மாவட்ட ஆட்சியர், கேரள உயர்நீதிமன்ற அதிகாரிகளிடம் பேசியதும், தகவல் மாவட்ட நீதிபதி நிசார் அகமதிடம் சென்றது. நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதி நேரில் வந்து, அதிகாரிகளுடன் கடையை திறக்க உத்தரவு பிறப்பித்தார். 15 நிமிடங்களில் பூட்டுகள் திறக்கப்பட்டதும், கண்ணாடி கதவும் திறக்கப்பட்டது. சற்று பதற்றமடைந்த குருவி தப்பிக்க முயற்சித்தது. மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒருவர் அதை அன்போடு பிடித்து வெளியே கொண்டுவந்து அதனை பறக்கவிட்டார்.அந்த நொடியை பார்த்த மக்கள் கைத்தட்டியும், உற்சாகமாக உற்சாகம் தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!