அட... ஜோடிகள் ரொமான்ஸ் செய்யக்கூடாது… காரில் போர்டு மாட்டிய டிரைவர்!

 
அட... ஜோடிகள் ரொமான்ஸ் செய்யக்கூடாது…  காரில் போர்டு மாட்டிய டிரைவர்!

 
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு நகரில் வசித்து வருபவர் கார் ஓட்டுநர்.  இவர் தன்னுடைய வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்காக வித்தியாசமான எச்சரிக்கை அறிவிப்பை வைத்திருந்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில்   “இது உங்கள் தனிப்பட்ட இடம் அல்ல,” என்ற வாசகத்துடன் தொடங்கி  “வாகனத்தில் ஜோடிகள் ரொமான்ஸ் செய்யக்கூடாது. 

 

கார்

தயவுசெய்து தூரத்தை கடைப்பிடித்து அமைதியாக இருங்கள். மரியாதை கொடுங்கள், மரியாதை பெறுங்கள்” என பதிவிடப்பட்டுள்ளது.  இந்த எச்சரிக்கையைப் படித்த வலைதள பயனர்கள், கேப் டிரைவரின் நேர்மை மற்றும் வெளிப்படையான அணுகுமுறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.  

கார்

இது குறித்து நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி “இதை எல்லா கேப்களிலும் வைத்துக்கணும்!” என சிலர் கருத்து தெரிவிக்க, “அவசரமாக ஒரு முறையான வழிகாட்டி தேவைப்படுகிறது!” என வேடிக்கையான மீம்கள் பகிரப்படுகின்றன. சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இந்த எச்சரிக்கை, நகரங்களில் அதிகரித்து வரும் ஒழுக்கக் குறைபாடுகளுக்கு எதிரான ஒரு சத்தமில்லா எதிர்வினையாக பார்க்கப்படுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?