நெகிழ்ச்சி வீடியோ... டர்பன் கட்டிய பிறகு மது அருந்தக்கூடாது... வெளிநாட்டு யூடியூபருக்கு இந்திய கடைக்காரர் அட்வைஸ்!

 
 நெகிழ்ச்சி வீடியோ... டர்பன் கட்டிய பிறகு மது அருந்தக்கூடாது... வெளிநாட்டு யூடியூபருக்கு இந்திய கடைக்காரர் அட்வைஸ்!

ஆஸ்திரேலியாவிலிருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு யூடியூபர் ஒருவர் சுற்றுலா வந்திருந்தார். அப்போது  தலையில் அணியும் டர்பான் வாங்க கடைக்கு சென்றிருந்தார் . அந்த சமயத்தில் கடைக்காரர் கூறிய வார்த்தைகளும், யூடியூபர் டர்பன் அணிந்ததும் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. அதன்படி  ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த யூடியூபர் லூக் என்பவர் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்று பயணத்திற்காக சென்றிருந்தார். அப்போது ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் அருகே வந்த ஒருவரிடம் தனக்கு தர்பான் வாங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

அவர் லூக்கை கடைக்கு அழைத்து சென்று நிலையில் கடைக்காரர் அவருக்கு வெவ்வேறு நிறங்களில் தர்பான்கள் காட்டினார். அதில் லூக் நீல நிறத்தை தேர்ந்தெடுத்தார். இந்நிலையில் கடைக்காரர் அவருக்கு ட்ர்பானை அவரது தலையில் கட்டினார். அப்போது லூக் தர்பான் ஆண்கள் மட்டும் தான் அணிவார்களா? என்று கேட்டதற்கு பெண்களும் அணிவார்கள் என பதிலளித்தார். பின்னர் கடைக்காரர் “தர்பான் கட்டிய பிறகு கண்டிப்பாக புகை பிடிக்கக் கூடாது…மது அருந்தக்கூடாது” எனக் கூறியுள்ளார்.  
அவருடைய அந்த வார்த்தைகள் சீக்கிய மதத்தினை மதிக்கும் மனப்பான்மையை காட்டும் வகையில்  இருந்தது. இதனைத் தொடர்ந்து லூக் கடையில் நடந்த இந்நிகழ்வை “இந்தியாவில் 5 டாலர் தர்பான்” என்னும் தலைப்பில் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில் பலரது  பாராட்டுகளை பெற்றுள்ளது. அதில் “தர்பான் என்றால் மரியாதை. அதனை கட்டிய பிறகு நாம் அதை காப்பாற்ற வேண்டியது கடமை” எனப் பதிவிட்டுள்ளார்.
இன்னொருவர் “கடைக்காரர் சீக்கிய மதத்தை சேர்ந்தவர் இல்லை என்றாலும் தர்பானின் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் நன்கு அறிந்தவர். அவருக்கு மரியாதை செலுத்துங்கள்” என  கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web