நெகிழ்ச்சி வீடியோ... கிரிக்கெட் விளையாட்டு அல்ல., அது ஒரு உணர்ச்சி... இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சுக்கு பிறகு தொடங்கிய திருமணம்!

பிப்ரவரி 23 ம் தேதி இந்தியா- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாயில் நடத்தப்பட்டது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்போட்டியில் பல பரபரப்பான தருணங்களை பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இந்நிலையில் இந்த கிரிக்கெட் நிகழ்விற்காக தங்களது திருமண விழாவை இடைநிறுத்தி விட்டு கிரிக்கெட்டை பார்த்த தம்பதியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
यह रहा वीडियो शादी के बीच मे मैच देखना जरुरी समझा। pic.twitter.com/prv9v3KQil
— sarita (@sarita_5M) February 24, 2025
இந்த வீடியோவில், மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் மண்டபத்தில் அனைவருமே பெரிய திரையில் கிரிக்கெட் போட்டியை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தனர். விராட் கோஹ்லி சதம் அடித்து, இந்தியா வெற்றி அடைந்தபின் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். திருமணத்தில் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டனர்.
அதன்பிறகு தான் சாவகாசமாக திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் “இந்தியாவில் கிரிக்கெட் ஒரு விளையாட்டு அல்ல, அது ஒரு உணர்ச்சி” என பதிவிட்டு வருகின்றனர். இந்நிகழ்வு இந்திய மக்களிடையே கிரிக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமக்கு காட்டுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!