நெகிழ்ச்சி வீடியோ... ஓடும் ரயிலில் இருக்கைகள், தண்ணீர் பாட்டில் தாளத்துடன் அசத்தலாக பாடிய பார்வையற்றவர்கள் குழு!

 
பார்வையற்றவர்கள் குழு

இந்தியா முழுவதும் நடுத்தர மக்களின் நீண்ட தூர பயணங்களில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க  ஒரே சாய்ஸாக இருப்பவை ரயில்கள் தான். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில்  வடோதராவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில், பார்வைத்திறன் இல்லாத பயணி சென்று கொண்டிருந்தார். அவர்  பாடிய பாடலும், அவரது குரலும் ரயிலில் பயணம் செய்தவர்களை நெகிழச் செய்தன. அவரது பெயர் விகாஸ் .  அந்த பயணி, ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து, பாலிவுட் திரைப்படப் பாடல் ‘யே துனே க்யா கியா’ என்ற பாடலை, உணர்ச்சிகரமாக பாடினார்.

பின்னணியில் மெதுவாக நகரும் ரயில் இசைக்கு ஒரு இயற்கை சான்றாக அமைந்துவிட்டது.  அவருடன் பயணித்த மற்ற பார்வைத்திறன் இல்லாத நண்பர்கள் பாடலை பாடாமல், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இருக்கைகளைத் தட்டி தாளத்தை போட்டனர்.  
திடீர் இசை நிகழ்ச்சியைப் போல் உணரப்பட்ட இந்நிகழ்வு, சக பயணிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.  இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில்-இல் ஹரிஷ் கேத்கர் என்ற பயனர் பதிவிட்டிருந்தார்.  இது 7 மில்லியனுக்கும் மேல் பார்வைகள், 1.1 மில்லியன் லைக்குகள், 23000க்கும் மேல் கருத்துகள் பெற்றுள்ளது.
நெட்டிசன்கள் இதற்கு உருக்கமாக  , “இது மிகவும் தூய உணர்வைத் தருகிறது”, “இது உண்மையான இசை”, “இதுபோல் இயற்கையாக நிகழும் இசைக்கச்சேரி ரயிலில் கண்டதில்லை” என பதிவிட்டு வருகின்றனர்.  இந்த வீடியோ, மனதை தொட்ட இசை எப்படி எல்லைகளைத் தாண்டி பேசுகிறது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாக இணையத்தில் பரவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது