காதலுக்கு எதிர்ப்பு... பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி நுழைந்த காதலர்கள்!

 
பாகிஸ்தான் காதலர்கள்

திருமணத்திற்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த இளம் காதலர்கள் இருவரும், இந்திய சர்வதேச எல்லையைக் கடந்து குஜராத் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இருவரையும் கைது செய்து, விசாரணைக்காகக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்திய எல்லையோரம் அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் போபட் குமார் (24). இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த கவுரி (24) என்ற இளம்பெண்ணும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தங்கள் காதலைத் திருமணத்தில் முடிவெடுக்க முடிவு செய்தபோது, அவர்களது காதலுக்கும் திருமணத்திற்கும் இரு வீட்டாரின் பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

காதல்

பெற்றோரின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்ய முடியாத நிலையில், நேற்று இரவு அந்தக் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தது. தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ இந்தியாவே சரியான புகலிடமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கலாம். அதன்படி, காதலி கவுரியுடன் சேர்ந்து போபட் குமார், சர்வதேச எல்லை வழியாக இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம், ரபர் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

அப்போது, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர்கள் இருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். உடனடியாகக் காதல் ஜோடி போபட் குமார் மற்றும் கவுரி ஆகிய இருவரையும் வீரர்கள் கைது செய்தனர்.

காதல் காதலர்கள் கைது ஜோடி

கைது செய்யப்பட்ட இருவரிடமும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்தான், திருமணத்திற்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால்தான், வேறு வழியின்றித் தாங்கள் இருவரும் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாகக் காதல் ஜோடி கூறியுள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட இந்தக் காதல் ஜோடியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேலும் விசாரணைக்காகப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

காதலுக்காகத் தங்கள் நாட்டின் எல்லையைத் தாண்டி, இன்னொரு நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பேசு பொருளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!