ட்ரம்ப்பின் நெருக்கடிக்கு விளையாட்டு மூலம் பதிலடி... அமெரிக்காவை வீழ்த்தி வெனிசுலா முதன்முறையாக உலக பேஸ்பேல் சாம்பியன் பட்டம் வென்று சாதனை!
அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற உலக பேஸ்பேல் கிளாசிக் (World Baseball Classic) இறுதிப் போட்டியில், நட்சத்திர வீரர்கள் நிறைந்த பலமான அமெரிக்க அணியை 2-3 என்ற ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெனிசுவேலா அணி முதன்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய வெனிசுவேலா, இம்முறை அதே அமெரிக்க மண்ணில் வைத்து அந்த அணியைப் பழிவாங்கியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற 6 அணிகளில் ஒன்றாக வெனிசுவேலா இணைந்துள்ளது.
அரசியல் ரீதியாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா இடையே கடும் போர் பதற்றமும், அதிகாரப் போட்டியும் நிலவி வரும் சூழலில் இந்த வெற்றி சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைப்பிடித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "வெனிசுவேலாவில் புதிய ஆட்சி அமையும் வரை அமெரிக்காவே நிர்வாகம் செய்யும்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார். இத்தகைய அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், விளையாட்டு மைதானத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது வெனிசுவேலா மக்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

வெற்றிக்குப் பிறகு மியாமி மைதானத்தில் திரண்டிருந்த வெனிசுவேலா ஆதரவாளர்கள் தங்கள் நாட்டுத் தேசியக் கொடியை ஏந்தி கண்ணீர் மல்கக் கொண்டாடினர். இந்தத் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடும் விதமாக, வெனிசுவேலாவில் இன்று (மார்ச் 18) பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் அறிவித்துள்ளார். உலக அரங்கில் ஒரு சிறிய நாடு, வல்லரசு நாட்டை விளையாட்டில் வீழ்த்தி விஸ்வரூபம் எடுத்துள்ளது விளையாட்டு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
