நகைக் கடன்களுக்கும் கட்டுப்பாடு... நாடு முழுவதும் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்.. நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சி!
நாடு முழுவதும் இன்று முதல் தங்கத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் கடன் தொகைக்கு புதிய வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுவரை நடைமுறையில் இருந்த பொதுவான கடன் விதிகள் மாற்றப்பட்டு, தற்போது வாடிக்கையாளர்கள் கோரும் கடன் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி சிறு கடன் பெறுபவர்களுக்கும் பெரும் தொகை கடன் கோருபவர்களுக்கும் தனித்தனி வரம்புகளை மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த உள்ளன.

புதிய விதிகளின்படி 2.5 லட்சம் ரூபாய் வரை தங்கம் அடமானக் கடன் பெறுபவர்கள், தங்கள் தங்கத்தின் சந்தை மதிப்பில் அதிகபட்சமாக 85% வரை தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும். நடுத்தர வர்க்கத்தினரைக் கருத்தில் கொண்டு இந்தச் சலுகை வழங்கப்பட்டாலும், அதற்கு மேல் கடன் பெறுவோருக்குக் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் தேவைப்படுவோருக்குத் தங்கத்தின் மதிப்பில் 80% மட்டுமே கடனாக வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5 லட்சம் ரூபாய்க்கும் மேலாகப் பெரும் தொகையைத் தங்கக் கடனாகப் பெற விரும்புவோருக்கு, தங்கத்தின் மதிப்பில் இருந்து 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் நிதி நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் அதிகத் தொகை கடன் பெற்றுத் தொழில் தொடங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் மற்றும் அவசரத் தேவைக்காகப் பெரும் தொகை எதிர்பார்ப்பவர்கள் தற்போது கவலையடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
