இன்று 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியீடு !

 
தேர்தல்

இந்தியாவில் 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூன்  19-ம் தேதி நடைபெற்றது. அந்த வகையில் புதுடெல்லி, பஞ்சாப் மாநிலம் லூதியான தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குர்பிரீத் சிங் கோகி மறைவை  அடுத்து அந்த தொகுதி காலியானது.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

அதே போல், மேற்கு வங்க மாநிலம் காளிகஞ்ச் பகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ நஸிருதீன் அகமது தொகுதி,  குஜராத் மாநிலத்தின் காடி தொகுதி, குஜராத்தில்  மற்றொரு தொகுதியான விஸாவதர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பயானி பூபேந்திரபாய் தொகுதி  கேரளா மாநிலம் நிலாம்பூர் தொகுதியில் இடதுசாரி ஆதரவுடன் வெற்றி பெற்ற பி.வி.அன்வர் தொகுதி   என 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகள்.
அதன்படி குஜராத், கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, அந்தந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.  பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தன. இதற்கான தேர்தல் பிரசாரம் கடந்த 17ம் தேதி முடிவடைந்தது.

தேர்தல் வாக்குப்பதிவு கல்லூரி மாணவிகள் வோட்டு

அதனை தொடர்ந்து, 5 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், 5 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வாக்குசாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது