“பார்த்துக்க யாருமில்ல..” மனைவியைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி!

 
இஸ்ரோ விஞ்ஞானி

பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நாகேஷ்வர் ராவ் (72), தனது மனைவி சந்தியாவை (65) கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாகேஷ்வர் ராவ், இஸ்ரோவில் பல்வேறு செயற்கைக்கோள் தயாரிப்புத் திட்டங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது ஒரே மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். வயதான காலத்தில் தங்களை கவனித்துக்கொள்ள யாரும் இல்லையே என்ற ஏக்கம் நாகேஷ்வர் ராவுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.

நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், நாகேஷ்வர் ராவ் தனது மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அமெரிக்காவில் உள்ள தனது மகளைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார். பதறிப்போன அவரது மகள், பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவரை உடனடியாகத் தனது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வீட்டிற்கு வந்த மருத்துவர், சந்தியா உயிரிழந்ததை உறுதி செய்ததோடு, அவரது கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டு ஆவலஹள்ளி போலீஸாருக்குத் தகவல் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் நாகேஷ்வர் ராவ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். "எனக்கு வயதாகிவிட்டது, எனக்கோ அல்லது என் மனைவிக்கோ உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கவனித்துக்கொள்ள யாரும் இல்லை. நான் இறந்த பிறகு என் மனைவி அநாதையாகிவிடுவார் என்ற பயத்தில் அவரைக் கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டேன்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாகவே நாகேஷ்வர் ராவ் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. மகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதால் ஏற்பட்ட தனிமை மற்றும் முதுமை குறித்த பயம் அவரை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளியுள்ளது.

தற்போது நாகேஷ்வர் ராவ் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அவரைத் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். விஞ்ஞானத் துறையில் சாதனை படைத்த ஒருவரின் வாழ்க்கை, இத்தகைய ஒரு துயரமான முடிவைச் சந்தித்திருப்பது பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!