தொழுகை முடிந்து வீடு திரும்பிய போது பயங்கரம்... ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாஹீர் உசேன் பிஜில் வெட்டிக்கொலை....!

 
ஜாஹீர் உசேன் பிஜில்

உலகம் முழுவதும் இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் நோன்பை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில் நெல்லை டவுண் காட்சி மண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாஹீர் உசேன் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்றிருந்தார். அவர் தொழுகை முடிந்து வீட்டுக்கு திரும்பி வரும் வழியில்  வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்புலன்ஸ்

அதிகாலையில் தொழுகை முடிந்து, வீடு திரும்பியபோது ஜாஹீர் உசேனை மர்மநபர்கள் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பினர். ஜாஹீர் உசேனின்  உடலை கைப்பற்றி நெல்லை டவுண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

போலீசார்

வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான 32 சென்ட் இடம் பிரச்சனை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஜாஹீர் படுகொலை செய்யப்பட்டது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஜாஹிர் உசேன் பிஜில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அந்த பகுதியில் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?