கள்ளக்காதலியை கொலை செய்து உடலை எரித்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்!

 
உபி

 

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் 32 வயது பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.டி.ஐ. பகுதியைச் சேர்ந்த பிரீத்திக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், 62 வயதான ராம் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் லேகர் கோன் பகுதியில் வாடகை வீட்டில் அடிக்கடி தங்கி வந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ராம் சிங்கிற்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் பிரீத்தி அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம் சிங், ஒரு வாரத்திற்கு முன்பு பிரீத்தியை அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி இரும்புப் பெட்டிக்குள் வைத்து தீ வைத்து எரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ்

உடல் பாகங்களை அப்புறப்படுத்த லோடு ஆட்டோவில் எடுத்துச் சென்றபோது துர்நாற்றம் வீசியதால் டிரைவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்ததும் ராம் சிங் தப்பியோடினார். பெட்டிக்குள் சாம்பல் மற்றும் எலும்புகள் மட்டுமே இருந்தன. இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ராம் சிங்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!