மறுமலர்ச்சி திமுக மல்யுத்தம் !! மனக்குமுறலில் மலர் மன்னனின் மனசாட்சி !

 
திமுக


ஆளே இல்லாத டீக்கடையில யாருக்கய்யா டீ போட்டுக்கிட்டு இருக்க என்பது போல ஆளே இல்லாத கட்சியிலதான் சத்தம் அதிகமாக கேட்கும் என்பார்கள் என்ன காரணத்திற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அதையே மறந்து கொள்கைகளில் காற்றில் பறக்கவிட்டு கட்சி நடத்திக்கொண்டிருக்கும் வைகோ கட்சியில் சலசலப்பு அதுவும் கட்சி ஆரம்பிக்க அச்சாரம் போட திருச்சியில் இருந்து என்றால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் ஆமாங்க கொந்தளிப்பில் இருக்கிறார்கள் கட்சியினர் அப்படி என்னதான் விஷயமாய்யா சொல்றேன் கேட்டுக்க... மதிமுகவிற்கு திருச்சியில் மூன்று மாவட்டச்செயலாளர்கள் இருக்காங்க ஒருத்தரு மலர்மன்னனின் மனசாட்சி என வர்ணிக்கப்படும் வெல்லமண்டி சோமு மற்றொருவர் வைகோவிற்கு நெருக்கமாக இருக்கும் டிடிசி சேரன் இன்னொருத்தரு மணவை தமிழ் மாணிக்கம் அதென்ன மணவை மணப்பாறையைத்தான் மணவைனு சொல்வாங்க அந்த ஊரு பக்கம் அந்த மணவைதான் மன உளைச்சலை கொடுக்கிற குமுறுறாங்க ஊர் பக்கம்... 

திமுக
திருச்சியை மூன்றாக முன்னாடியே பிரிச்சிட்டாங்க அது ஊரறிந்த ரகசியம் ஆனா இப்ப தேர்தல் ஆணையம் போல தொகுதியை சீரமைக்கிறேன் பேர்வழினு சீரழிச்சுட்டாங்கனு புலம்புறாங்க, மூன்று எம்.எல்.ஏ தொகுதிக்கு ஒரு மாவட்டச்செயலாளர்னு பிரிச்சுட்டாங்க அதுல நிர்வாக வசதிக்காகனு சொல்றாங்க ஆனா நீண்ட நெடுங்காலமா கட்சியில் இருக்குறவங்கள கலந்து ஆலோசிக்காம இப்படி ஒரு அறிவிப்பை தலைமை வெளியிட்டுச்சேன்னு கொதிச்சு போயிட்டாங்களாம் அத்தோடு நீதி நேர்மை நியாயம் விஸ்வாசம்னு வாழ்ந்துகிட்டு இருக்கறவங்க பகுதியில் இருந்து சில பகுதிகளை பிரிச்சு கட்சியை வைத்து கல்லா கட்டுற ஆள்கிட்ட கொடுத்துட்டாங்களேனு குழுறிக்கிட்டு இருக்காங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்தானய்யா சாதாரணம் சரி ஆனா ரணமாகிடக்கூடாது இல்ல சில பகுதிகளை கேட்ட அந்த மாவட்டச்செயலாளர் யாராம் அவருதாங்க மணவை தமிழ் மாணிக்கம், வெல்லமண்டி சோமு , டிடிசி சேரன் ஆகியோர்கிட்ட இருந்த சில பகுதிகளைக்கைப்பற்றி கிலி கொடுக்கறேன் பாருனு இளமான முருகன்கிட்ட சாவல்விட்டதோட சாதிச்சுக்காட்டி மற்ற இரு மாவட்ட செயலாளர்களுக்கு தெரியாமலேயே சங்கொலியில் வர வச்சுட்டாங்களாம்,


இதையறிந்து கடுப்பான சோமு பொதுச்செயலாளர்கிட்ட நான் கட்சியைவிட்டே விலகி கொள்கிறேன் என கொதிச்சதால பொதுச்செயலாளர் வாரிசை கூப்பிட்டு யாரைக்கேட்டு இப்படி முடிவு எடுத்தனு கேள்விக்கணைகளால் துளைச்சு எடுத்துட்டாராம், கோபப்படாதீங்க நீங்களே பழையபடி பாருங்கனு உத்தரவு போட்டுட்டாராம் ஆனாலும் சங்குல ஊதலையாம் அதுனால ஏக கடுப்புல இருக்கிறாராம் ஆமா இவரு மீசை அமைச்சருக்கு நெருக்கமானவர் ஆச்சே ஆமா ஆமா ஆனா கட்சிக்கு ரொம்ப விஸ்வாசமானவரு சரி சரி அவ்வளவு பெரிய ஆள தமிழ் மாணிக்கம் என்ன அப்படி கேட்டுட்டீங்க அவரோட பராக்கிரமத்தை கேட்டிங்கணா அசந்து போயிடுவீங்க... அப்படா அப்படியா சொல்லுங்களேன் கேட்போம்...

வைகோ
மூன்று முறை வார்டு மெம்பர் எலெக்‌ஷன்ல நிண்ணு தோல்வியை தழுவியவர் ஒருமுறை அதிமுக கூட்டணியில ஒருமுறை திமுக கூட்டணியில ஒருமுறை தனியா மதிமுக சார்பாக நின்னு தோற்றவர் அப்பா இவ்வளவு பெரிய பராக்கிரமாம் படைத்தவரா இதுக்கே இப்படி அசந்துட்டா எப்படி கட்சியின் பெயரைச்சொல்லி கல்லா கட்டுவதில் வல்லவராம் சின்னவரோட மாமனாருக்கே நாந்தான் ஊத்திக்கொடுப்பேன் என உதார்விடுவதோட கட்சியே என் கட்டுப்பாட்டில்தான் இருக்குனு தன்னோட புகழ்பாடாத இடமே இல்லையாம் அதெல்லாம் கூட பரவாயில்லை தனியாக ஒரு டிரஸ்டே நடத்துகிறார் அதற்கு கட்சியின் பெயரைப்பயன்படுத்து ஏக்கர் கணக்குல இடத்தை வாங்கி போட்டிருக்காராம், கொதிச்சு போய் கிடக்காங்க கட்சிக்காரங்க ஆக ஆக நாக்கை வாடகைக்கு விடும் மற்றொரு மறுமலர்ச்சி, விஸ்வாசம் இல்லாத நாஞ்சில் சம்பத்துனு சொல்லுங்க சரியா சொல்லிட்டீங்க நான் சொல்லி என்ன பண்றது ஏறவேண்டியவங்க மண்டையில ஏறணுமே !

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!