நூதன அறிவிப்பு... கொசுவை பிடித்து கொடுத்தால் சன்மானம்!

பிலிப்பைன்சில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் தலைநகரில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் பணம் ஈட்டுவதற்காக வேண்டுமென்றே தண்ணீரைத் தேங்கவைத்து கொசுக்களை உற்பத்தி செய்யும் அபாயமும் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிலிப்பைன்சில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!