Rewind 2024: தமிழ் சினிமாவுக்கு ரூ.1000 கோடி நஷ்டம்... ‘கங்குவா’ துவங்கி கதற வைத்த படங்களின் லிஸ்ட்!!
உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வரும் நிலையில், 2024ல் தமிழ் சினிமாவுக்கு ரூ.1000 கோடி வரை நஷ்டமடைந்துள்ளதாக திரைப்பட விநியோகிஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2024ல் மொத்தம் 241 நேரடி தமிழ் படங்கள் வெளியான நிலையில், அவற்றில் 18 படங்கள் மட்டுமே சொல்லிக் கொள்கிற மாதிரியான வெற்றியைப் பெற்றுள்ளது.
விஜய் நடித்த தி கோட், சிவகார்த்திகேயனின் அமரன், தனுஷ் இயக்கிய ராயன் படங்கள் ஹிட்டடித்து வசூலைக் குவித்தன.
வசூலில் ரஜினியின் வேட்டையன், அரண்மனை 4, மகாராஜா, மெய்யழகன் ஆகிய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றியது.
இந்த மெகா படங்களுக்கு அடுத்தப்படியாக பட்ஜெட் குறைந்து தயாரான டிமான்டி காலனி 2, வாழை, ஸ்டார், பிளாக், ரோமியோ, கருடன், பிடி சார், அந்தகன் போன்ற படங்களும் வெற்றி பெற்ற நிலையில், சின்ன பட்ஜெட்டில் உருவான லப்பர் பந்து, பேச்சி மற்றும் லவ்வர் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றிகளைக் குவித்தன.
இதில் பெரிய துயரமாக கோடிகணக்கில் செலவழிக்கப்பட்டு பெரிய ஸ்டார் நடிகர்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் பரிதாபமாக மண்ணைக் கவ்வியது.
இதில் விக்ரம் நடித்த தங்கலான், கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2, ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா லிஸ்ட்டில் இடம் பிடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!