REWING 2025: தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கிய டாப்-10 ஹீரோக்கள்!

 
தமிழ் ஹீரோக்கள் ரஜினி அஜித் கமல் விஜய்

சினிமா வர்த்தக வட்டாரங்களின் தகவல்படி, கடந்த 2025ல் அதிக சம்பளம் வாங்கிய தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் லிஸ்ட் ஒன்று வலம் வந்துக் கொண்டிருக்கிறது. அதன் படி கடந்த வருடம் நடிகர்களின் சம்பளப் பட்டியல் இதோ:

1. விஜய் - ₹275 கோடி
அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' (தளபதி 69) படத்திற்காக அவருக்கு ₹275 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அவர் முதலிடம் பிடித்துள்ளார்.

2. ரஜினிகாந்த் - ₹200 முதல் ₹250 கோடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2025-ல் வெளியான 'கூலி' திரைப்படத்திற்காக அவருக்கு சுமார் ₹200 - ₹250 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாகத் தெரிகிறது. வயதானாலும் அவரது மார்க்கெட் வேல்யூ குறையாமல் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

3. அஜித்குமார் - ₹120 முதல் ₹180 கோடி
2025-ல் அஜித்தின் 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய படங்கள் கவனத்தைப் பெற்றன. இதில் 'குட் பேட் அக்லி' படத்திற்காக அவர் சுமார் ₹150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் வீடு

4. கமல்ஹாசன் - ₹100 முதல் ₹150 கோடி
'விக்ரம்' படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு கமலின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்தது. 'தக் லைஃப்' உள்ளிட்ட படங்களுக்கு அவர் ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளம் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார்.

5. சூர்யா - ₹50 முதல் ₹70 கோடி
பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வெளியான 'கங்குவா' திரைப்படத்தின் வெற்றி மற்றும் அவரது நடிப்புத் திறமைக்காக சூர்யா ஒரு படத்திற்கு ரூ. 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

6. தனுஷ் - ₹50 கோடி
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களிலும் பிஸியாக இருக்கும் தனுஷ், இப்போது ஒரு படத்திற்கு தலா ரூ. 50 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

7. சிவகார்த்திகேயன் - ₹40 முதல் ₹50 கோடி
'அமரன்' திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயனின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது அவர் டாப் ஹீரோக்களின் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார்.

விஜய்சேதுபதி

8. விஜய் சேதுபதி - ₹30 கோடி
ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஒரு படத்திற்கு சுமார் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

9. கார்த்தி - ₹25 கோடி
தொடர்ச்சியான வெற்றிகளைக் கொடுக்கும் கார்த்தி, தயாரிப்பாளர்களின் லாபகரமான நடிகராகக் கருதப்படுகிறார். இவரது சம்பளம் ரூ. 25 கோடியாக உள்ளது.

10. சிலம்பரசன் (STR) - ₹18 முதல் ₹25 கோடி
'மாநாடு' படத்திற்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கிய சிம்பு, தற்போது ஒரு படத்திற்கு ரூ. 18 கோடி முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!