இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி!! அசுர வேகத்தில் உயரப்போகும் அரிசி விலை!!

 
அரிசி

கடந்த சில மாதங்களாகவே உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர ஏழை, எளிய மக்கள் திண்டாடி வருகின்றனர். வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உக்ரைன் ரஷ்ய போருக்கு பிறகு உலகம் முழுவதும் உணவுப் பொருட்களின் விலை கடுமையான விலையேற்றத்தை கண்டு வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.   குறிப்பாக  ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கடுமையான அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும்  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரிசி ஆலை


 சர்வதேச அளவில் கடந்த 11 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் அரிசிக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டால் உலக அரங்கில் அரிசியின் விலை மேலும் உயரக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  எல் நினோ மழை பொழிவு காரணமாக நிலைமை இன்னும் மோசம் அடைய கூடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச அளவில் இந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் அதாவது 40 சதவீதத்திற்கும் அதிகமாக அளவு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

அரிசி

இதனால் கோதுமையை போல் உள்நாட்டில் அரிசியின் விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு அரசு ஏதேனும் கட்டுப்பாடு விதித்தால் அது உலக அரங்கில் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலக சந்தையில் இந்தியாவின் அரிசி தான் மலிவு விலையில் விற்கப்படுகிறதாம். இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளான தாய்லாந்து மற்றும் வியட்னாமிலும் அரிசியின் விலை அதிகமாக உள்ளது. உலகில் சுமார் 300 கோடி மக்களின் பிரதான உணவு  அரிசி தான்.  அரிசிகள் அதிகம் விளைவிக்கப்படும் நாடுகளான வங்கதேசம், இந்தியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா   நாடுகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக   அரிசி உற்பத்தி மேலும் குறையலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web