ரிங்கு சிங் தந்தை காலமானார்... கிரிக்கெட் உலகம் இரங்கல்!

 
ரிங்கு சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கன்சந்த் சிங் காலமானார். நீண்ட நாட்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உத்தரப்பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யதார்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குடும்பத்தினரும் உறவினர்களும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். ரிங்கு சிங் சமீபத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார்.

இந்த துயர செய்தி வெளியாகியதும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் தங்கள் அனுதாபத்தை பதிவிட்டு வருகின்றனர். ரிங்கு சிங்குக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!